Monday, August 07, 2006

எச்சரிக்கை!!! தமிழ் திரை உலகமே உனக்கு!!!!

நான் சனிக்கிழமை இரவை திரை அரங்கில் கழிப்போம் என சென்னை தேவி திரைஅரங்கம் போனேன். அங்கே "உயிர்" படம் உயிர்ப்புடன் சென்றது. படம் பார்க்கலாம்னு ஆசையா டிக்கெட்டுக்காக காத்திருந்தேன்... என் நேரம் எனக்கு முன்பாக அதுவும் சரியாக டிக்கெட் முடிந்துவிட்டதாக கூறினார்கள்... சரி அடுத்து வேற படங்களை பட்டியல் போட்டு வேறெ எதுக்கு போவது என முடிவு செய்து ஒரு படத்தை தேர்வு போயாகிவிட்டது. (மத்த எல்லா படமும் பார்த்தாகி விடதால்) படம் ஆரம்பித்தது...முதல் சீனில் கதாநாயகன் "பெட்டி படுக்கையுடன் " ஹாஸ்டல் வருகிறான்". வந்தவுடன் தனது ஆட்டோகிராபை எடுத்து அழுகிறான். அதுக்கப்புறம் நான் நினைத்தேன் "டைரக்டர் எதோ சொல்ல வர்றாண்டா என நினைத்து படத்தில் முழுமையான ஈடுபாட்டை காண்பித்தேன்.. அடப்பாவிகளா!!!!!!!!!!!!(*****) இதுதான் அடுத்து நான் சொல்லிய வார்த்தைகள்.... படத்திற்கு கொடுக்கப்பட்டது சென்சார் "யு:"செர்டிபிகேட். ஆனால் படம் முழுவதும் கேவலமான வசனங்கள்..... அடேய்ங் கொ??!!!!! இந்த படத்துக்காட டிக்கெட் எடுத்து வந்தோம்னு நண்பனும் புழம்பல் தாங்கலை.... நேரம் ஆக!!! ஆக!!! படம் பச்சையான் கொச்சையான வசனக்களை கொண்டு இருந்தது. படத்தை வழங்கிய அந்த மஹா உத்தம யோக்கிய நாயை என் நாவினால் தீய சொற்களில் பொசுக்கினேன். பரதேசி இவனெல்லாம் படம் எடுத்துருக்காம்பாரு, என அடுத்தடுத்த காட்சிகளை நினத்து புழம்ப!!!சென்சார் எப்படி இந்த படத்திற்கு செர்ட்பிகேட் கொடுத்து அங்கீகாரம் செய்தது என. மறுபுறம் நினைத்து கொண்டேன். ப்டம் முழுவதும் ஆபாச வசனங்கள்.... 3 கேரக்டர்கள்... அதுவும் சிறு பிள்ளைகளை போல காதாநாயகனும் , நாயகியும்...இருக்காங்க அவர்களை ??? தொடுவது, அந்தரங்க வார்த்தகளை உச்சரிக்க வைத்தது என படம் முழுவது விரசம் விரசம் விரசம்... நியாயமா பார்த்தா படத்தை தடை போட்டிருக்கோனும், அத விட்ட சென்சார் அதிகாரிகள் என்ன "பறித்து கொண்டிருக்கிறார்கள்" என் தெரியவில்லை...... பாய்ஸ் படத்தை தரக்குறைவாக பேசிய அம்மணிகள், இப்படத்தை ஒன்னுமே சொல்லாதது ஒரு வேடிக்கை, அவளுக எல்லாம் பெண்மனிகளா!!! என மனம் நொந்தது ஒரு புறம் இருக்கு 1000 மடங்கு பாய்ஸ் படமே மேல் என நினைத்து கொண்டேன்.... படத்தின் பேரை பாரு "துள்ளுற வயசு" இதுக்கு எஸ்.ஜே சூர்யாவும்,செல்வராகவனும் எவ்வள்வோ தேவலை. கோபால்(டைரக்டர்) நீ ஒரு "???? மகன் " என சொல்லி விட்டு வந்துவிட்டேன். இம்சை அரசன் கொடுத்த தமிழ் சினிமாவா இது, இவ்வளவு கேணத்தனமான படத்திற்கு கார்த்திக்ராஜா இசை வேறு.. டேய் உங்கப்பா பேரை கெடுத்துடாதே என பொறுமல். படத்தில் யாருக்கு நடிக்க தெரியலை!!! அது நடிப்பே இல்லை... பாவம் அந்த கதாநாயாகி என நடித்த சின்ன பெண்.. அதிலும் அவளை காண்பித்த விதம் இருக்க அட் அட அட பார்த்த நான் கூட பரிதாபபட வேண்டியாதாகி விட்டது. இவளின் எதிகாலம் ????????????????????????????????????? நாய்கள் படம் எடுத்தால் இப்படித்தான்...(மன்னிக்க அந்த அப்பிராணிகளை இவனுடன் ஒப்புமை செய்ததற்கு) சோத்ததான் தின்கிறானா !! இல்லை வேற ஏதாவதும் ??? என என் பின் சீட்டில் இருந்த அன்பரின் கருத்து. இனிஒரு விதி செய்வோம் இனி இந்த மாதிரி படங்களை பார்ப்பதை தவிர்ப்போம் என கூட வந்த நண்பரிடம் சொன்னேன். நண்பர்களே உங்களுக்கும் என் மன குமுறல்களை கூறியுள்ளேன் நீங்களும் தயவு செய்து இப்படத்திற்கு யாரும் செல்ல வேண்டாம். மன வேதனையுடன் குமரன்!!!

4 comments:

said...

மேலும் எழுதுங்கள்

said...

நன்றி சுபன்

said...

நன்றாக உள்ளது குமரன்

said...

நன்றாக இருக்கிறது வலைப்பூ. தொடர்ந்து எழுதுங்கள் குமரன் தம்பி.