பால்யம் தொட்டு வரிசைகள்...
வரிசைகள் என்றால்
மக்கள் கூட்டங்கள்
கூட்டணியில்லா கூட்டமாதலால்
கை கோர்க்காமல் கோரிக்கை பத்திரங்கள் ஏந்தி
ஒருவர் முதுகை ஒருவர் பார்த்து
எறும்பை ஆசானாக கொண்டு
வரிசைப்படிப்பைகற்றாரோ
எம்முன்னோர்.
தந்தை நின்றார் அன்று வரிசையில்
எனக்கு பால்யகல்விகூடத்தில்
என் அனுமதி கோரிக்கைக்காக
தாய் நின்றார் வரிசையில்
தண்ணீருக்காக குடத்துடன்
வீட்டில் தாகம் தீர்ப்பதற்காக
தாத்தா நின்றார் வரிசையில்
கடையில் ரேஷன் அட்டையுடன்
மாதகடைசியால் மளிகைபொருளுக்காக
பாட்டி நின்றால் வரிசையில்
அரசு மருத்துவமனியில்
தன் கண்ணை சோதிக்க
அண்ணன் நின்றான் வரிசையில்
வெளிநாட்டு வேலைகிடைத்ததால்
அமெரிக்க தூதரகத்தின்முன்
அக்காவும் நின்றாள் வரிசையில்
முதிர்கன்னியாய் வழிநோக்கி
தன் முதல்கணவனுக்காக
நானும் நின்றேன் வரிசையில்
தல படம் ரிலீசாதலால்
பணத்தோடு டிக்கெட்கவுண்டரில்
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment