Saturday, September 29, 2007

பொன்னியின் செல்வ

சிவகாமியின் சபதம் எடுத்த போது அதில் நாகநந்தி பாத்திரத்தை ஒப்புமை செய்து கொண்டு இருப்பேன். கற்பனையிலும் மிதப்பேன்.

ஆனால் பொன்னியின் செல்வன் கல்கியினுடையது படித்த பிறகு யார் கதாநாயகன் என்பதை வல்லரையன் வந்தியதேவன் உட்பட அத்துனன பாத்திரங்களையும் மிகைபடுத்தியே படைத்துள்ளார்.


எனக்கு பிடித்த பாத்திரங்களில்

நந்தினி தான் . பச்சோந்தி போல இடத்திற்கு ஏற்றார்போல தன் நடத்தையை மாற்றிக்கொண்டு அவள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் எல்லோர் மனதையும் மாற்றிவிடும். பார்த்திபேந்திரன், கந்த மாறன் உட்பட பெரிய பழூவூரார் வரை சாம்ராஜ்ஜியத்தையே ஆட்டி படைக்கும் சக்தியை கொண்டிருந்தாள்.

பிற பாத்திரங்களில் பிடித்தது

வந்தியதேவன் - கதையில் கதாநாயகன்
குந்தவை பிராட்டி
அநிருத்தர்
செம்பியன் தேவி
அருள்மொழிவர்மர் (ராஜராஜ சோழன்)
சேந்தன் அமுதன்.
பூங்குழலி
மந்தாகினி

Sunday, June 03, 2007

கேள்விக்கு என்ன பதில்- கேட்டது மன்றத்தார்

1. உங்களைப்பற்றி ஒரு குறிப்பு [ மன்ற உறுப்பினர்கள் உங்களை பற்றி தெரிந்துகொள்ளும் விதமாக ]



கிட்டதட்ட 25 வருடங்களுக்கு முன் பஞ்சாலை தொழிற்சாலையில் பணிபுரியும் என் தந்தைக்கும் இல்லத்தரசியான என் தாய்க்கும் 2 ஆம் ஆண்மகனாக பிறந்து பின்னர் எல்கேஜி யூகேஜி அறியா வயசில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மதுக்கரை ஒன்றியத்தில் ஒன்னாம் வகுப்பு சேர்ந்துமுதல் எல்லாத்தலையும் முதல் ரேங்க் எடுக்காமல் 40 மதிபெண்களுக்கே மூச்சு திணற படித்து என் ஆசான் புலவர் முனுசாமியின் வழிகாட்டுதலால் தமிழ்(?)மேல் காதல் கொண்டு ??( ஹி ஹி ஹி இது பொண்ணு ஒன்னும் இல்லீங்க)கல்லூரியில் பஞ்சாலை தொடர்பான படிப்பு கிடைக்காமல் மின்னனுவியலில் பட்டயம் பெற்று, அன்னையின் மறைவுக்கு பிறகு சிற்றன்னையின் வளர்ப்பில் வளர்ந்து வாழ்வில் நிறைவான நல்ல நண்பர்களையும் சம்பாதித்து எங்கெங்கோ அலை அடித்து பின்னர் சென்னை பக்கம் ஒதுங்கி 2 வருடமாக சென்னையில் மையம் கொண்டு இருக்கின்றேன்.



************************************************************************************
2. உங்கள் மனைவி எப்படி இருக்க வேண்டும்? - உங்கள் எதிர்பார்ப்பு



எதிர்பார்ப்புகள் இருந்தால் சுவாரசியம் குறையும் இருந்தாலும் என் சிறிய எதிர்பார்ப்பு தமிழ் கலாச்சாரத்தில் ஊறி திளைத்தவராக இருந்தால் நன்று என்னைப்போல் :)

************************************************************************************
3. நீங்கள் தெரிந்தே செய்த தவறு என்ன?



என்னுடைய பள்ளி மதிப்பெண் ரிப்போர்ட்டில் அப்பா கையெழுத்துக்களை போட்டது அவரை எமாற்ற நினைத்துதான்....

************************************************************************************


4..உங்களை கவர்ந்த(பிடித்த) பெண் - அதன் காரணம் ?



நிச்சயமாக என் பாட்டி ( அம்மாவின் அம்மா) இன்றும் எனக்காக அழுகும் ஒரு ஜீவராசி இந்த பூமியில்.. அம்மா காட்டிய அன்பின் வலிமையை இழந்த போது அதைவிட அதிகம் எனக்கு காட்டிய அன்பு தெய்வம் . இன்றும் எனக்காக வழிமேல் விழிவைத்து இருக்கும் அந்த முதுமை இளவரசி.


************************************************************************************

5.உங்கள் எதிர்கால லட்சியம்.


குளோபல் வார்மிங் எனப்படும் தீயசக்தியிடமிருந்து இந்த பூமியை காக்க நடவைக்கைகளை மேற்கொள்வது. இயற்கையுடன் இணைந்து வாழ ஆசை, அதற்காகவே இயற்கை உரங்களை போட்டு விவசாயம் செய்து மன நிறைவுடன் வாழ்க்கையை செலுத்துவது. விவசாய மக்களுக்கு செயற்கை உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது. இது பத்தி எழுதினா ஒரு கட்டுரையே எழுதலாம் ஆனா இன்று ஒரு நாள் முடியாது.